
posted 20th October 2024
உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
ஏன் தடுப்பூசிகள் எமது வாழ்க்கையில் முக்கியமானது?
தடுப்பூசிகள் மனித வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றதற்குக் காரணம், எப்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதிலிருந்து தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதிலும், இறப்பிலிருந்து காப்பாற்றுவதிலும், இதனால் வாழ்க்கையின் தரத்தினை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதன் முக்கிய அடிப்படையானது, எந்தெந்த நோய்க் கிருமிகளால் நோய்கள் தோற்றுவிக்கப்படுகின்றதோ அந்தந்த கிருமிகளை வைத்தே அந் நோய்களின் கோரத் தாண்டவத்திலிருந்து காப்பாற்றப்படுகின்றது. இதற்கு முக்கிய உதாரணமாக, உலகமே அறிந்த, கோவிட் நோயின் தாண்டவத்தினை மறந்திருக்க வாய்ப்பில்லை.
மிகவும் குறிப்பிடத்தக்க பொது சுகாதார சாதனைகளில் ஒன்றாகும், தொற்று நோய்களைத் தடுப்பதிலும், இறப்பைக் குறைப்பதிலும் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், இது நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு எதிர்த்துப் போராட உதவுகிறது. தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது, ஏனெனில் அவை தனிநபர்களைப் பாதுகாக்கின்றன, சமூகங்களைப் பாதுகாக்கின்றன மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றன.
இனி, இத் தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்ப்போம்.
இத் தடுப்பூசிகள் நோய்க் கிருமிகளை அடையாளம் கண்டு நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக நோயெதிர்ப்பு மண்டலத்தினை (immune system) ஆயத்தப்படுத்துவதி வைப்பதே இவற்றின் முக்கியமான தொழிலாகும். இத்தடுப்பூசிகள் புரதங்கள் அல்லது நுண்ணுயிரிகளின் பலவீனமான வடிவங்கள் போன்ற வைரஸ் அல்லது பாக்றீரியாக்களின் சிறிய, பாதிப்பில்லாத பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. இவை நோயை ஏற்படுத்தாமல் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன. இவ்வாறான செயல்முறை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆன்டிபாடிகளை (antibodies) உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் நுண்ணுயிரிகளின் பலவீனமான இப் புரதங்கள் நோய்க்கிருமியின் "நினைவகத்தை" (memory) உருவாக்குகிறது. எப்போதாவது ஒருவர் உண்மையான நோய்க் கிருமிகளினால் தாக்கப்பட்டால், அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பானது அக் கிருமிகளை உடனடியாக அடையாளம் கண்டு கொள்வதன் மூலமாக நடுநிலையாக்குகிறது. அத்துடன் நோயையும் தடுக்கிறது.
ஒவ்வொருவரின் பாதுகாப்பு
தடுப்பூசிகளாவன போலியோ, சின்னம்மை மற்றும் பெரியம்மை போன்ற பலவிதமான உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்களிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறான நோய்களினால் மில்லியன் கணக்கான உயிர்களுக்கு நிரந்தர குறைபாடுகளை ஏற்படுத்தியது. ஆனால், தடுப்பூசித் திட்டத்தின் வளர்ச்சியின் காரணமாக இந்த நோய்கள் உலகில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன அல்லது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாமல், தடுப்பூசிகள் நீண்டகால குறைபாடுகளை உருவாக்கும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. உதாரணமாக, மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி HPV இன் சில குறிப்பிட்ட சில இனங்களிலிருந்து பாதுகாக்கிறது. இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் பிற வகையான புற்றுநோய்களை பிற்காலத்தில் ஏற்படுத்துகிறது. நோயின் உலகளாவிய சுமையை குறைப்பதன் மூலமும் தனிநபர்களுக்கு ஆரோக்கியமான விளைவுகளை உறுதி செய்வதன் மூலமும் இந்த நீண்ட கால பாதுகாப்பு திட்டம் இன்றியமையாதது.
கேட் (herd) நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சமூக பாதுகாப்பு
தனி்ப்பட்ட நோய்த் தடுப்பூசிகளின் பயன்களுக்கு அப்பால் இத் தடுப்பூசித் திட்டமானது ஒரு சமுதாயத்தை ஒரேமுகமாகக் நோய்களிலிருந்து காப்பாற்றப் பாவிக்க முடியுமானால் அவ்வகையான தடுப்பூசி நோய்த் தடுப்பூசித் திட்டமானது கேட் (herd) நோய் எதிர்ப்புச் சக்தி என்று அழைக்கப்படுகின்றது. ஆனால், இவ்வாறான திட்டத்திற்கு உட்படாதவர்கள், உதாரணமாக, பிறந்த குழந்தைகள், முதியவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தடுப்பூசி போடாமல் இருக்கையில் மறைமுகமாகப் பாதுகாக்கப்படுவார்கள்.
சின்னமுத்து போன்ற அதிக தொற்று நோய்களுக்கு, கேட் (herd) நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கு பெருந் தொகையான மக்களுக்குத் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
நோய் பரவாமல் தடுக்கும்
தடுப்பூசிகளின் முக்கியமான பங்கானது மக்களுக்கு தொற்று நோய்களினால் பேரளவில் உயிராபத்தினை உண்டாக்காமல் தடுப்பதுதான்.
மேலும், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் முன்பு, ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு சமுதாயத்தினுள் அல்லது ஒரு நாடு முழுவதிலும் அல்லது உலகம் முழுவதிலும் விரைவாகப் பரவும் தொற்று நோயானது பலவிதமான சுகாதார பாதிப்புக்களையும், இறப்புகளையும் மட்டுமல்லாது பொருளாதாரச் சீரழிவுகளை ஏற்படுத்தியதையும் நாம் அறிவோம். ஏன் எம்மால் உலகத்தில் கோவிட்-19ரினால், தடுப்பூசிகளின் கண்டுபிடிப்புகளுக்கு பின்பும், ஏற்படுத்தப்பட்ட உயிரிழப்புகளையும், மனித உயிர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளையும், பொருளாதாரச் சீர்கேடுகளையும், உலகமே ஸ்தம்பித்து அடங்கிப் போயிருந்ததையும் மறந்திடத்தான் முடியுமா? அதேநேரம், விஞ்ஞானிகளின் அயராத உழைப்பினால் தடுப்பூசியானது கண்டுபிடிக்கப்பட்டு கோவிட்-19 தொற்று நோயினைக் கட்டுப்படுத்தி மனித குலத்தையே மீண்டும் நல்ல காற்றினை சுவாசிக்கச் செய்ததினையும் எப்படித்தான் எம்மால் மறக்க முடியும்.
எவ்வாறிருந்தாலும் அந்நோய்களுக்கென்று தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது போடப்பட்டு அந்நோய் எதிர்ப்பினை மக்கள் உலகின் பெரும்பாலான நாடுகளில் பெற்றிருந்தாலும், ஏன் பெரும்பாலான உலக நாடுகளிலிருந்து அந் நோயானது ஒழிக்கப்பட்டிருந்தாலும், உலகின் சில பகுதிகளில் அந்நோயினால் மனிதர் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, போலியோ நோய்.
எனவே, இதற்குக் காரணம் நோய்க் கிருமிகளின் திரிபுபடும் தன்மையாகும். இதற்கு கோவிட் நோயும் உதாரணமாகும்.
இவ்வாறாகத் திரிபுபடும் நோய்க் கிருமிகளால் விஞ்ஞான உலகத்தில் சுகாதார நிறுவனங்களுக்கு நித்தமும் சவாலாக அமைகின்றது.
தடுப்பூசிகளினால் ஏற்படும் பொருளாதார நன்மைகள்
தடுப்பூசிகளினால் ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கலாம். ஆனால், இதையும் தாண்டி அவை பொருளாதார நன்மைகளையும் தருகின்றன. அவை எவ்வாறென்றால் நோய்கள் ஏற்பட்டால் தனிப்பட்டவர்களுக்கும், அரசுக்கும் செலவாகும் மருத்துவச் செலவுகள் கணிசமான அளவில் மிச்சப்படுத்தப்படுகின்றது. அத்துடன், இக் கொடிய நோய்களிலிருந்து காப்பாற்றப்பட்டு சாதாரண வாழ்க்கையினை வாழவும் உதவுகின்றது.
தடுப்பூசிகளின் பங்களிப்பினை வளர்ந்துவரும் நாடுகளில் அதாவது, சுகாதார வளங்கள் குறைந்த நாடுகளில், பிரச்சாரங்கள் மூலமாக மக்களுக்கு நோய்களிலிருந்து தங்களையே காப்பாற்றுவதற்குரிய விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்ளுவது நன்மையினை பயக்கும்.
பொது சுகாதாரத்தைப் பேணுவதற்கும், நோய் பரவுவதைத் தடுப்பதற்கும், நோய் எதிர்புச் சக்தி குறைந்தவர்கள்ப் பாதுகாப்பதற்கும் தடுப்பூசிகள் அவசியம். இதனால், மனித ஆயுட்காலம் ஆரோக்கியமாகின்றது. அத்துடன், இத்தடுப்பூசிகள் தனிமனதனையும் தாண்டி சமூகங்கள், அதையும் தாண்டி உலகத்தையும் காப்பாற்றி சுகாதார வாழ்வினை உவந்தளிக்கின்றது. தடுப்பூசிகளானது, மருத்துவ விஞ்ஞானத்தின் அமூக முன்னேற்றத்தினால் நம் எதிர்காலச் சந்ததியினரையும் காப்பாற்றுகின்றது. அத்துடன், இனிவரும் புதுப்புது நோய்களின் பரிமாண மாற்றங்களையும் இம் மருத்துவ விஞ்ஞானம் எதிர்பார்த்து அவற்றிற்கு முன்னேற்பாடாக தடைசெய்யும் வழிமுறைகளையும் நுணுக்கமாக, துல்லியமாக திட்டமிட்டு வைத்துள்ளது என்பதினைக் கூறுவதானால் ஆச்சரியப்படுவதற்கு அவசியமேயில்லை.
Why Vaccines are Important?
Vaccines are one of the most significant public health achievements in human history, playing a crucial role in preventing infectious diseases, reducing mortality, and improving the overall quality of life. They are a powerful tool that helps the immune system recognize and combat harmful pathogens such as viruses and bacteria. The importance of vaccines cannot be overstated, as they protect individuals, safeguard communities, and contribute to global health security.
How Vaccines Work
Vaccines work by preparing the immune system to recognise, fight and defend against pathogens. They contain small, harmless parts of pathogens, such as proteins or weakened forms of the microorganism, which stimulate the immune response without causing the disease. This process prompts the immune system to produce antibodies that fight infections and create a "memory" of the pathogen. If the person is later exposed to the actual virus or bacterium, the immune system can quickly recognize and neutralize it and thereby preventing illness.
Protection for Individuals
Vaccines play a major role in protecting individuals from a wide range of life-threatening serious illnesses, such as polio, measles, and smallpox, caused severe disabilities for millions of lives. However, with the development of vaccination programmes these ailments have been controlled or eradicated in the world.
Vaccines also protect against diseases that cause long-term-health complications. For example, the Human Papilloma Virus (HPV) vaccine guards against some specific strains of the HPV, which cause cervical cancer and other types of cancer later in life. This long-term protection programme is vital by reducing the global burden of disease and ensuring healthier outcomes for individuals.
Herd Immunity and Community Protection
One of the most important benefits of vaccines extends beyond individual protection but it helps the community and protect the population known as "herd immunity."
Herd immunity occurs when a significant portion of a population becomes immune to a disease, either through vaccination or previous infection, preventing a disease from spreading. This provides indirect protection to those who cannot be vaccinated, such as newborns, the elderly, or individuals with weakened immune systems.
For highly contagious diseases, like measles, achieving herd immunity requires a large percentage of the population to be vaccinated. When people choose not to vaccinate, it puts others at risk and can lead to outbreaks of preventable diseases. The concept of herd immunity highlights the societal responsibility that comes with vaccination—by getting vaccinated, individuals contribute to the overall safety and health of their communities.
Preventing Disease Outbreaks
Vaccines are crucial in preventing outbreaks of infectious diseases that can have devastating effects on populations. Before the development and widespread use of vaccines, epidemics and pandemics caused widespread illness, death, and economic disruption. The COVID-19 pandemic illustrated the importance of vaccines in controlling the spread of a novel virus. The rapid development and deployment of COVID-19 vaccines have been instrumental in reducing the severity of illness and saving lives globally.
Vaccines also prevent the resurgence of diseases that have been nearly eliminated. For example, despite the eradication of polio in most parts of the world, the disease still persists in a few regions. If vaccination efforts are not sustained, polio and other diseases could reemerge, reversing decades of progress in global health.
Economic Benefits
In addition to their health benefits, vaccines provide significant economic advantages. Preventing diseases through vaccination reduces the need for medical treatment, hospitalizations, and long-term care, saving individuals and healthcare systems significant amounts of money. Immunization also reduces productivity losses that result from illness, enabling people to continue working and contributing to their communities.
Widespread vaccination campaigns are cost-effective, especially in low- and middle-income countries where healthcare resources are limited. By preventing disease outbreaks and reducing the burden on healthcare systems, vaccines help improve economic stability and growth in these regions.
Conclusion
Vaccines are essential for maintaining public health, preventing disease outbreaks, and protecting vulnerable populations. They have transformed human life expectancy, reduced childhood mortality, and enabled communities to thrive by preventing the spread of infectious diseases. The benefits of vaccination extend beyond individuals to entire communities and the global population. As medical science continues to advance, vaccines remain one of the most effective tools in the fight against preventable diseases, safeguarding the health of future generations.